Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’… வெளியான செம மாஸ் அப்டேட்…!!!

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Lokesh Kanagaraj shares BTS of Vikram featuring Fahadh Faasil and Vijay  Sethupathi: 'Absolute bliss' | Entertainment News,The Indian Express

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 17-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் டிசம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, ஏப்ரலில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |