சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் கவின் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தை கணேஷ் பாபு இயக்க, ஐஸ்வர்யா பாஸ்கரன் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மகனே என் கண்மணி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது டாடா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.