Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’… ஷுட்டிங் குறித்த சூப்பர் அப்டேட்…!!!

கார்த்தியின் சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Karthi on Sulthan's clash with Nagarjuna's Wild Dog: 'There is always an  audience for good films' | Entertainment News,The Indian Express

மேலும் முனீஸ்காந்த், சிம்ரன், முரளி சர்மா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன்பின் கொரோனா பரவல் காரணமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |