நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகியுள்ள ‘சுல்தான்’ படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி ‘பருத்திவீரன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா ,சிறுத்தை, தோழா ,மெட்ராஸ் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் . கடந்த ஆண்டு இவர் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்த ‘தம்பி’ திரைப்படம் வெளியாகியிருந்தது . தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் .
இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் . இந்நிலையில் சுல்தான் படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.