நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நெப்போலியன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .
சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கண்டிப்பாக ஏப்ரல் 2ஆம் தேதி சுல்தான் திரைப்படம் வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுல்தான் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது .