நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
#Sulthan Promo ☺️☺️😍
Tamil – https://t.co/PKixgBXge2
Telugu – https://t.co/5lg4f8P9hQ#SulthanFromApril2 #SulthanFromFriday
— Actor Karthi (@ActorKarthi6) March 28, 2021
இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்திருந்தது. இந்நிலையில் சுல்தான் படத்தின் அசத்தலான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.