கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள விக்ராந்த் ரோணா படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ, புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங்- 3 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டிகொப்பா- 3 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதுதவிர அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ள விக்ராந்த் ரோணா படத்தில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ளார் .
மேலும் இந்த படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்ஷன் பேண்டசி அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் 3டி-யில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த அசத்தலான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.