தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் இருக்கிறார். இவரை தேர்தலில் எதிர்த்து இயக்குனர் பாக்கியராஜ் போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வியடைந்து விட்டார். அதன்பின் நடைபெற்ற திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் இயக்குனர் கே. பாக்யராஜுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அதாவது நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை அவதூறாக பேசுவதாகவும் சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளதால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென நடிகர் சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி இயக்குனர் பாக்யராஜும், பிரபல இயக்குனர் விஜய்யின் சகோதரர் நடிகர் உதயாவும் நடிகர் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.