நடிகர் சங்க தேர்தல் செல்லும் மற்றும் மறு தேர்தல் நடத்த படாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்ற வருடம் 2019-ல் நடந்தது. இத்தேர்தலை ஒத்தி வைப்பதாக நடிகர் சங்க பதிவாளர் உத்தரவிட்டிருந்தார். நடிகர் விஷால் தரப்பினர் இவ்வுத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுதேர்தல் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு சார்பில் அதிகாரியை நியமித்து இருந்தனர். இதை எதிர்த்து நாசர் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யுமாறு ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் ஜாமீன் வழக்கு தொடுத்தனர்.
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த தனி நீதிபதி, நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் மூன்று மாதத்திற்குள் வாக்காளர் பட்டியல் தயார் செய்து தேர்தல் நடத்துமாறும் அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு அதிகாரி பொறுப்பு வகிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து விஷால், கார்த்தி தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சத்தியநாராயணா மற்றும் முகமது ஷபிக் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். கடந்த 2019ஆம் வருடம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலானது செல்லும். மறு தேர்தல் நடத்த படாது என உத்தரவிட்டு இருக்கின்றனர். தனி நீதிபதி வழங்கிய தேர்தல் செல்லாது என்ற உத்தரவை தள்ளுபடி செய்து, நான்கு வாரத்திற்குள் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றது.