சசிகுமார் நடிப்பில் உருவாகவுள்ள அயோத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவான எம்.ஜி.ஆர் மகன் படம் தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. மேலும் இவர் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் அயோத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், யஸ்பால் ஷர்மா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் மந்திரமூர்த்தி, ‘எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது தான் இந்த படம். கதையை கேட்டவுடன் இந்த படத்தில் நடிக்க சசிகுமார் ஒப்புக்கொண்டார். ‘அயோத்தி’ தலைப்பு இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது’ என தெரிவித்துள்ளார்.