நடிகர் சத்யராஜ் தனது அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சத்தியராஜ். தற்போது இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் ஹீரோக்களின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகிறார் . மேலும் இவர் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் .
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்தியராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சத்தியராஜ் தனது அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர் .