நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் தற்போது ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் சந்தானம் பல பாசப் போராட்டங்கள் நிறைந்த அப்பா-மகன் செண்டிமெண்ட் கதையில் நடிக்க உள்ளாராம் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்குகிறார் . இந்த படத்தில் சந்தானத்திற்கு தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார் . மேலும் லொள்ளு சபா சுவாமிநாதன், வம்சி கிருஷ்ணன், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் நடிக்கின்றனர் . இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்து இயக்குனர் ‘ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களையும் , அவர்கள் கடந்து வந்த உணர்வு போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் . இந்தப் படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை நடிக்க உள்ளார் . பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும்’ என்று கூறியுள்ளார்.