Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தீப் கிஷானின் “மைக்கேல்”…. டீசர் வெளியீடு எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி  மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகின்றார். தற்போது இந்த படத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருக்கிறது அதன்படி இந்த படத்தின் டீசர் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு வெளியாகி உள்ள போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.ஜெயக்கொடி விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடித்த புரியாத புதிர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |