சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதை தொடர்ந்து இவர் 180, காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
SHARWANAND – SIDDHARTH: FILMING COMPLETE… Entire shoot of #Telugu film #MahaSamudram – starring #Sharwanand, #Siddharth, #AditiRaoHydari and #AnuEmmanuel – is now complete… Directed by Ajay Bhupathi… Produced by Ramabrahmam Sunkara. pic.twitter.com/J1ZDP2Qoow
— taran adarsh (@taran_adarsh) July 9, 2021
மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் ஹைதாரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏகே என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது . இந்நிலையில் மஹா சமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.