Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’… படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?…!!!

சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது . இதைத் தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

Shoot of GVM - STR's Nadhigalile Neeradum Suriyan to begin soon! - Tamil  News - IndiaGlitz.com

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 19-ஆம் தேதிக்குப் பின் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |