Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். N.கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், அசுரன் பட பிரபலம் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் .

இந்த படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் பத்து தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |