Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’… சூப்பர் அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, டேனியல் பாலாஜி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, மனோஜ், ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகிற ரம்ஜான் தினத்தில் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |