தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவருக்கு எப்போது திருமணம் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவரது தந்தையும், இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எனக்கோ, என் மனைவிக்கோ பிடித்தபடியான மருமகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சிம்புவுக்கு பிடித்த பெண் கிடைத்தால் போதும். விரைவில் அவரது திருமணம் நடக்கும் என்று பேசியுள்ளார்.