நடிகர் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க மாட்டோம் என 3 நடிகர்கள் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முதலில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் நடிகை நயன்தாரா சிம்பு நடித்தால் தான் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம். இதேபோன்று தற்போது 2 நடிகர்களும் சிம்பு நடித்தால் நாங்கள் படத்தில் நடிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் வருத்தப்பட்ட மணிரத்தினம் நடிகர் சிம்புவிடம் நடந்ததை கூற அவர் என்னால் யாரும் படத்தை விட்டு விலக வேண்டாம் நானே படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம். இந்த 2 நடிகர்கள் யார் என்று கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தளபதி விஜய் இயக்குனர் மணிரத்தினம் வந்திய தேவனாக நடிப்பதற்கு முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு பணிகள் தாமதமானதால் தளபதி விஜய் படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக தற்போது கார்த்தி வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.