Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சிம்பு படத்தில் உலக நாயகன்” வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்….. திரையரங்குகளில் கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் சித்தி இட்னானி ஹீரோயினாக நடிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் புதுமையாக எதுவும் இல்லை என்றாலும், கதையை சொல்லி இருக்கும் விதம் ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், வசூல் ரீதியாக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படத்தில் ஐயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த டெல்லி கணேஷ் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் திரையில் தோன்றும் போது அவருக்கு பின்னால் உலகநாயகன் கமல்ஹாசனின் ரெஃபரன்ஸ் காட்சி இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

Categories

Tech |