நடிகர் சிம்புவிற்காக ரத்தினகிரி முருகன் கோயிலில் மண்டியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிம்பு. அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.நடிப்பு ,நடனம், இயக்கம்,பாடல் போன்ற பல திறமைகளை தன்னகத்தே உள்ளடக்கியவர் சிம்பு. ஆனால் கடந்த சில நாட்களாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் சிம்புவின் ரசிகர்கள் பட்டாளம் அவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறையாமல் இருப்பதை தற்போது நடந்திருக்கும் செயல் உணர்த்தியுள்ளது .
நடிகர் சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி முருகன் கோயிலில் மண்டியிட்டபடி படிக்கட்டுகள் ஏறிச் சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி உள்ளனர்.சிம்புவின் ரசிகர்கள் சிம்புவுக்காக செய்த இந்த செயல்காண்போர் நெஞ்சை நெகிழச் செய்தது.