‘டான்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, கௌதம் மேனன், பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த், சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Aarambichachu… 💥
Dubbing of our #DON started with an auspicious pooja today 🎙️@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @sooriofficial @dop_bhaskaran @Inagseditor @Udaya_UAart @anustylist @tuneyjohn @DoneChannel1 pic.twitter.com/8RyPNGkUJe
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 23, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டான் படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.