நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தனது திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் . இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் மாஸ் காட்டியுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்த படத்தில் டி.இமான் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் ‘ராயபுரம் பீட்டர்’ பாடலை பாடியிருந்தார். இதைத்தொடர்ந்து காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய ‘ஐ அம் சோ கூல்’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கடந்த 2015-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரஜினி முருகன் படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் டி.இமான் இசையில் ‘ரஜினி முருகன்’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். மேலும் கடந்த 2016 -ஆம் ஆண்டு விமல், அஞ்சலி நடிப்பில் வெளியான திரைப்படம் மாப்ள சிங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ‘எதுக்கு மச்சான் காதலு’ என்ற பாடலை பாடியிருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடித்த லிப்ட் படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியிருந்தார். தற்போது இந்த பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து செம ஹிட் அடித்துள்ளது.