Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’… ரிலீஸ் எப்போது?… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Siva Karthikeyan's Don team is penalised - English

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்நிலையில் டான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |