சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் குறித்து பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டான் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து நடிகை இஷா கோபிகர் இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் வேற லெவலில் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அயலான் திரைப்படம் இந்த வருட கடைசியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.