நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை மற்றும் நடிகருமான சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள சிவக்குமார் வீட்டில் ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் நலமுடன் உள்ளதாகவும், அறிகுறி ஏதும் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது . மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது குடும்பத்தினர் இது குறித்த எந்தவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.