தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினுடன் சேர்ந்து ஒரு படத்தில் இணைய போகிறார்.
இந்தப் படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை க்யாரா அத்வானி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.