சூரியிடம் மோசடி செய்த தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது:
நடிகர் சூரி 1999-ல் சினிமா துறைக்குள் நுழைந்து, வென்னிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் புரோட்டா சூரி என்று பிரபலம் ஆனவர். அன்புவேல் ராஜா தயாரித்த வீர தீர சூரன் படத்தில் நகைச்சுவை நடிகரான சூரி நடித்து கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கி தராமல் அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். மேலும் பணம் பெற்று மொத்தமாக ரூபாய் 2.70 கோடி மோசடி செய்திருக்கிறார்.
இதனால் மனமுடைந்த சூரி சென்னை காவல் ஆணையர், மகேஷ் குமார் அகர்வாளிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆணையர் உத்தரவின் அடிப்படையில் அடையாறு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி, வீர தீர சூரன் பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்பு சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவு படி இருவரையும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கை பதிவு செய்தனர்.