தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமின்றி தற்போது விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, கௌதம் மேனன், விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூரி தன்னுடைய உடற்கட்டமைப்பை சிக்ஸ் பேக்கிற்கு மாற்றியுள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படகுழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விடுதலை படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.