சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார்.
we can’t wait for this one! we expect fireworks!
watch #JaiBhimOnPrime, this Diwali, Nov 2 🎇@Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol @PoornimaRamasw1 @kabilanchelliah @thanga18 pic.twitter.com/5o23Cdm1hS
— prime video IN (@PrimeVideoIN) October 1, 2021
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 2-ம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது.