சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய விருது வாங்கிய நடிகர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கிய நடிகர் சூர்யா உட்பட படத்தில் நடித்த 5 பேர் கௌரவப்படுத்தப்பட்டனர்.
இந்த விழாவின் போது விருமன் படக்குழுவினர் ரூபாய் 25 லட்ச காசோலையை நடிகர் நாசரிடம் வழங்கினார்கள். இந்த பணத்தை நடிகர் சங்கம் கட்டுவதற்காக வழங்கியுள்ளனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.