Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் சூர்யா கிட்ட கத சொல்லியாச்சு” அது ஒரு மிகப்பெரிய படம்…. கனவு படம் குறித்து மனம் திறந்த பிரபலம்…..!!!!!

பிரபல இயக்குனர் தன்னுடைய கனவு படம் குறித்த முக்கிய தகவலை  கூறியுள்ளார். ‌

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பிறகு பா. ராஞ்சித் தற்போது விக்ரமின் 62-வது திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் பா. ரஞ்சித் தன்னுடைய கனவு படம் குறித்த தகவலை கூறியுள்ளார்.

அதாவது அவர் தன்னுடைய கனவு படமான ஜெர்மன் என்ற திரைப்படத்தை கூடிய விரைவில் இயக்க இருக்கிறாராம். இந்த படம் சர்வதேச அளவிலான கடத்தல் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த தகவலை மறுத்துள்ள பா. ரஞ்சித் தன்னுடைய கனவு படத்தின் கதை குறித்து சூர்யாவிடம் கூறியுள்ளதாகவும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் மிகப்பெரிய படமாக ஜெர்மன் படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |