நடிகர் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக சூர்யா வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமும் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் தற்போது வணங்கான் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனையடுத்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் சூர்யா படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு படப்பிடிப்பு தொடங்கியது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சூர்யா வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Shoot begins..!
Need all your blessings..!!#Suriya42 @directorsiva @ThisIsDSP @StudioGreen2 @UV_Creations pic.twitter.com/6lSqkVt8t1— Suriya Sivakumar (@Suriya_offl) August 24, 2022