நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
2007 – 2008 மற்றும் 2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு ரூபாய் 3.11 கோடி வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து 2011ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.. இதனை தொடர்ந்து வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்..