நடிகர் அருண் விஜய் இப்போது “ஓ மை டாக்” என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்து உள்ளனர். இதில் நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும், அவர் வளர்க்கும் நாய்க்கும் இடையேயுள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்திரைப்படம் நேற்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் தொடர்பாக ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது “செல்லப்பிராணி விரும்பியாக, இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பகிர்ந்துள்ளார். இவற்றிற்கு பதில் அளித்துள்ள நடிகர் சூர்யா, மிக்க நன்றி. உங்களுடைய பெரிய ரசிகர் நான். உங்களுடைய மகளுக்கும் இது பிடிக்கும் என நான் நம்புகிறேன் என்று அவருக்கு பதில் பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த உரையாடல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.