அக்கா-தம்பி இருவரும் இணைந்து சோனு சூட் செய்துவரும் சமூக சேவைக்கு பங்களிக்க முடிவு செய்து தங்களது உண்டியலை உடைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவில் டிராக்டெர் இல்லாத விவசாயி ஒருவர் தனது இரு மகள்களைக் கொண்டு உழவு செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் அவருக்கு ஒரு டிராக்டரை பரிசாக அளித்துள்ளார். இதனையடுத்து சோனு சூட்டின் சமூக சேவைக் குறித்து பரவலாக பேசப்பட்டது.
இதனை அறிந்த டெல்லி திகாரைச் சேர்ந்த லக்ஷயாவும் அவரது தம்பி தீக்ஷாவும் சேர்ந்து சோனு சூட்டின் சமூக சேவைக்கு உதவும் வகையில் தங்களின் சேமிப்பு உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். இது குறித்து பேசிய அக்கா தம்பி இருவரும், “வெள்ளித் திரையில் வில்லனாக நடிக்கும் சோனு சூட், நிஜ வாழ்க்கை ஒரு ஹீரோ” என்றனர். மேலும், உண்டியலில் உள்ள பணத்தை எப்படியாவது சோனு சூட்டிற்கு அனுப்பி வையுங்கள் என அவர்களின் பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளனர்.