Categories
சினிமா

நடிகர் ஜார்ஜ் மரியாளுக்கு இவ்வளவு பெரிய மகனா….? அதுவும் கதாநாயகனா….! என்ன படம் தெரியுமா….?

நடிகர் ஜார்ஜ் மரியானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதி படத்தில் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஜார்ஜ் மரியான். மேலும் இவருடைய மதராசப்பட்டினம் மற்றும் தெய்வ திருமகள் ஆகிய படங்களும் இவரின் நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தன. ஜார்ஜ் மரியான் தற்போது தன்னுடைய மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

70 ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற கதையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த திரைப்படத்திற்கு “தூங்கா விழிகள்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜார்ஜ் மரியான் தன்னுடைய மகனுடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |