ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் ஐங்கரன், 4G, ஜெயில், பேச்சுலர், இடி முழக்கம், அடங்காதே உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பகவதி பெருமாள், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Here it is.. the exciting announcement from #Bachelor #Adiye -Lyrical video releasing on September 30th.
@dhibuofficil musical 🎶 @gvprakash @Dili_AFF @dir_Sathish @thenieswar @Sanlokesh @thinkmusicindia @divyabarti2801 @itspooranesh @SakthiFilmFctry @gopiprasannaa pic.twitter.com/lfJagnnZwI
— G.V.Prakash Kumar (@gvprakash) September 28, 2021
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேச்சுலர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ என்கிற பாடல் (செப்டம்பர் 30) நாளை வெளியாகவுள்ளது.