Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சுலர்’…. பாடல்கள் ரிலீஸ்….!!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பேச்சுலர் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது இவர் மணிமாறன் இயக்கத்தில் செல்பி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில், பேச்சுலர், இடிமுழக்கம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் பேச்சுலர் படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பகவத் பெருமாள், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் பேச்சுலர் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய Jukebox வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |