நடிகர் ஜெயராமின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயராம் கோகுலம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயராமுக்கு கடந்த 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் காளிதாஸ் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.