நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன் . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லட்சுமி ப்ரியா, லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
https://twitter.com/mari_selvaraj/status/1376873879101177856
இந்த படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கர்ணன் படத்தின் நான்காவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கர்ணன் யுத்தமான ‘உட்றாதீங்க எப்போவ்’ பாடல் நாளை வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.