நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் D43, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
#JagameThandhiram from June 18th
So excited to show you all,Our Film!! 🙏🏼@dhanushkraja @sash041075 @AishwaryaLeksh4 @Music_Santhosh @kshreyaas @vivekharshan @kunal_rajan @DineshSubbaray1 @sherif_choreo @santanam_t @tuneyjohn #BabaBaskar @Stylist_Praveen @netflix @NetflixIndia pic.twitter.com/xdO9yKNyZB
— karthik subbaraj (@karthiksubbaraj) April 27, 2021
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் இந்தப்படம் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.