Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘D43’… படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் D43 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் நடிகர் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் D43 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |