நடிகர் தனுசுக்கு இந்த பெயரை சூட்டியது யார் என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுசை பொருத்தவரை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிப்பு திறமையால் 2 தேசிய விருதுகளை தட்டிப்பறித்த அவர் தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் நடிகர் தனுஷ். இந்நிலையில் அவருக்கு தனுஷ் என்ற பெயர் எப்படி வந்தது என்பது என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு என்பதாகும். இந்நிலையில் சினிமாவிற்குள் நுழைவதற்காக நடிகர் தனுஷுக்கு வேறு பெயர் மாற்ற வேண்டுமென திட்டமிட்டு அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா பெயரை தேர்ந்தெடுப்பதில் பிஸியாக இருந்து வந்துள்ளார். அப்போது தான் நடிகர் தனுஷ் கமலின் குருதிப்புனல் என்ற படத்தை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது நடிகர் நாசர் அந்த படத்தில் ஆப்பரேஷன் தனுஷ் என்ற ஒரு டயலாக்கை சொல்லுவாராம். அதை பார்த்த தனுசுக்கு அந்தப்பெயர் பிடித்துப்போகவே எனக்கு தனுஷ் என பெயரிடுங்கள் என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தான் அவருக்கு தனுஷ் என்று திரைபெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வரும் ஒரு தகவல்.