Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும்’… முன்பே கணித்த சிவகார்த்திகேயன்… வைரல் டுவீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கணித்துள்ளார்.

முன்னணி ஊடகம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவிக்கப்படும் தேசிய விருதில் யாருக்கு விருது கிடைக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று ட்வீட் ஒன்றை பதிவு செய்ய அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் நடிகர் தனுசுக்கு அசுரன் படத்திற்காக விருது கிடைக்கும் என பதிவிட்டிருந்தார் . இதையடுத்து சில நிமிடங்களில் தேசிய விருது அறிவிப்பு வந்தபோது தனுசுக்கு அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது என அறிவிக்கப்பட்டது. தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என முன்கூட்டியே கணித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |