நடிகர் தனுஷ் நடிக்க வேண்டிய ரோலில் தான் அடித்ததாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த சில படங்கள் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளதால், தற்போது எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் மற்றும் ஹாலிவுட்டில் தி கிரேமன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இதனையடுத்து நடிகர் தனுஷ் பற்றி பிரபல நடிகர் பகத் பாஸில் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது நடிகர் பகத் பாஸில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கும்பலங்கி நைட்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் முதலில் நடிகர் தனுஷ் தான் நடிக்க இருந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு நடிகர் பகத் பாசிலை பட குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தகவலை நடிகர் பகத் பாஸில் வெளியிட்டதால், நடிகர் தனுஷ் கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.