நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம் 4 மொழிகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை OTT யில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தனுஷ் இந்தி படம் ஒன்றிலும் அக்ஷய்குமாருடன் இணைந்து நடிக்கிறார். இதனை தமிழ் மொழியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ராட்சசன் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமாரின் புதிய படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாக்க இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.