Categories
சினிமா

நடிகர் தனுஷ் பற்றிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

செல்வ ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “நானே வருவேன்” திரைப்படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் “வாத்தி” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்க உள்ள இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” எனவும் தமிழில் “வாத்தி” எனவும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். தனுஷ் திரை உலகிற்கு அறிமுகமாகி 20 வருடங்களை கடந்துள்ளார். இதனை ரசிகர்களும் திரைத் துறையினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில் தனுஷ் நீண்ட அறிக்கை ஒன்றை அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக “வாத்தி” படக்குழு போஸ்டர் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. மேலும் தனுஷ் தனது முதல் திரைப்படமான “துள்ளுவதோ இளமை” படத்தில் பள்ளி
மாணவனாக நடித்து இருந்த புகைப்படத்தையும், இப்போது பள்ளி ஆசிரியராக நடித்து வரும் “வாத்தி” படத்தின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளது. அத்துடன் “வாத்தி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |