இசை வெளியீட்டு விழாவுக்கு பிரபல நடிகை வீல் சேரில் அமர்ந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரபல நடிகர் தனுஷ் இயக்குனர் ஜவகர் மித்ரன் இயக்கத்தில், அனிருத் இசை அமைப்பில் திருசிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராசி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனை ஒரே மேடையில் சேர்ந்து பார்த்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏனெனில் இயக்குனர் வெற்றிமாறனுக்கும், தனுசுக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக சமீபத்தில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது 2 பேரையும் ஒன்றாக பார்த்ததால் பிரச்சனை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நடிகை நித்யா மேனன் இசை வெளியீட்டு விழாவுக்குவீல் சேரில் அமர்ந்து வந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரிடம் எதற்காக இந்த நிலைமையில் வந்தீர்கள் என்று கேட்டபோது, நடிகர் தனுஷ் ஆர்டர் போட்டார் அதனால்தான் வந்தேன் என்று கூறினார். மேலும் திருச்சிற்றம்பலம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்பதால் என்னால் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறினார்.