நடிகர் தனுஷ் ட்விட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது .
இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் டுவிட்டர் ஸ்பேஸில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ‘மீண்டும் இயக்குனர் தனுஷை எப்போது பார்க்கலாம்’ என கேட்டுள்ளார். இதற்கு நடிகர் தனுஷ் ‘இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுஷை பார்க்க முடியாது’ என பதிலளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ் பா.பாண்டி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.